தமிழ்நாடு

2 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் மெகா ஊழல் விவகாரம் : வாக்கி - டாக்கி முறைகேட்டில் கூட்டுச்சதி?

தமிழக காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

2 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் மெகா ஊழல் விவகாரம் : வாக்கி - டாக்கி முறைகேட்டில் கூட்டுச்சதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் ஒதுக்கப்படும் நிதியில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாகவும், ஊழல் செய்வதாகவும் புகார் எழுந்து வருகிறது.

காவல்துறையை நவீனப்படுத்துதல் திட்டம் 2017 - 2018 திட்டத்தின் படி, 10,000 வாக்கி - டாக்கிகள் வாங்க 47.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியைவிட அதிகமாக 83.45 கோடி செலவழித்து வாக்கி - டாக்கிகள் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கூடுதலாக நிதி செலவிடப்படும் 4,000 வாக்கி - டாக்கிகளை மட்டுமே வாங்கியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக நடைபெற்ற டெண்டரில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் டெண்டர் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு குளறுபடிகள் இந்த டெண்டரில் நடைபெற்றிருப்பதால் அதில் முறைகேடு நடத்திருப்பதாக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு பின்னர் தள்ளுபடியானது.

2 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் மெகா ஊழல் விவகாரம் : வாக்கி - டாக்கி முறைகேட்டில் கூட்டுச்சதி?

இந்த முறைகேடுகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து அப்போது காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் வாக்கி டாக்கி கொள்முதல் செய்த விவகாரத்தில், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, செப்டம்பர் 23 ம் தேதியிட்டு டி.ஜி.பி-க்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 11 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கிறார். அதனையடுத்து அந்த கடிதமும் வெளியே கசியத் தொடங்கியது.

இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டி.ஜி.பி-மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் காவல்துறை டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தக் கோரி வலியுறுத்தினர்.

மேலும், அப்போது தொழில்நுட்ப பிரிவு எஸ்.பியாக பணியாற்றிய அன்புச்செழியன் மற்றும் டி.எஸ்.பி சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் 2 வருடத்திற்குப் பிறகு இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் வாக்கி டாக்கி ஊழலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் மெகா ஊழல் விவகாரம் : வாக்கி - டாக்கி முறைகேட்டில் கூட்டுச்சதி?

இந்தச் சோதனையானது தமிழகம் முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் வீட்டில் நடைபெறுவதாகத் தெரிகிறது. மேலும் வாக்கி டாக்கி முறைகேடு நடந்தபோது தொழில்நுட்ப பிரிவு எஸ்.பியாக இருந்த அன்புச்செழியன் வீட்டிலும், தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களான ரமேஷ் மற்றும் உதயசங்கர் ஆகிய இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 12 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனையின் முடிவில் வாக்கி டாக்கி டெண்டர் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories