தமிழ்நாடு

9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100% அதிகரிப்பு : கல்வியில் சிறந்த தமிழகத்திற்கு ஏற்பட்ட அவலம்!

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100% அதிகரிப்பு : கல்வியில் சிறந்த தமிழகத்திற்கு ஏற்பட்ட அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் கல்வித்தரம் குறித்த புள்ளி விவரப்பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கல்வியைத் தொடர விரும்பாத மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலேயே ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளதாகவும், அதேசமயம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி மிகவும் பின் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கல்வி வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பில் சிறந்து விளங்கிய பெருமை வாய்ந்த தமிழகத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்தாண்டு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100% அதிகரிப்பு : கல்வியில் சிறந்த தமிழகத்திற்கு ஏற்பட்ட அவலம்!

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 8 சதவீதம் பேர் தங்களின் படிப்பை பாதியிலேயே கைவிட்டனர். அதையடுத்து 2018 - 2019ம் ஆண்டு 8 சதவீத மாணவர்கள் படிப்பைத் தொடர விருப்பமில்லாமல் முடித்துக்கொண்டுள்ளனர்.

இதில், 2016 - 2017ம் ஆண்டோடு ஒப்புடுகையில், 2018 - 2019ம் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகமாகும். இது அபாயமான இடைநிற்றல் எனக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையிலும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை அமலில் உள்ள நிலையிலும் இதுபோல இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடைநிற்றலுக்கு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புதேர்ச்சி மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, 100 சதவீதம் தேர்ச்சியை காட்டுவதற்காக மாணவர்களை அதிகம் படிக்குமாறு நிர்பந்திக்கப்படுவதும், வறுமை பொருளாதார சூழல் ஆகியவையே மிக முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories