தமிழ்நாடு

"இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? ஜால்ரா துறை அமைச்சரா?" - செங்கோட்டையன் கருத்தால் பொதுமக்கள் அதிருப்தி

மாணவர்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க அரசு கண்காட்டியதைக் கட்டளையாக ஏற்று அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுவதாக பொதுமக்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

"இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? ஜால்ரா துறை அமைச்சரா?" - செங்கோட்டையன் கருத்தால் பொதுமக்கள் அதிருப்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன மக்கள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகள்.

மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுதமுடியாத வகையில் 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்கள் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கடும் அச்சம் தெரிவித்தனர்.

"இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? ஜால்ரா துறை அமைச்சரா?" - செங்கோட்டையன் கருத்தால் பொதுமக்கள் அதிருப்தி

இதனையடுத்து, 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்.

முதலில், புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உட்பட நாடு முழுக்க எழுந்த எதிர்ப்புக்குப் பின்னர் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது எனத் தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

"இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? ஜால்ரா துறை அமைச்சரா?" - செங்கோட்டையன் கருத்தால் பொதுமக்கள் அதிருப்தி

பின்னர், பா.ஜ.க அரசின் மிரட்டலுக்குப் பயந்து, மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது எனக் கருத்துத் தெரிவித்தார். அதற்கு எழுந்த கண்டனங்களுக்குப் பிறகு, 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் பணிகளை தீவிரமாகத் தொடங்கியிருக்கிறார்கள். மாணவர்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க அரசு கண்காட்டியதைக் கட்டளையாக ஏற்று தமிழக அரசும், துறை அமைச்சரும் செயல்படுவதாக பொதுமக்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோதும், முதுகெலும்பில்லாத அ.தி.மு.க அரசு இதேபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. முதலில் நீட் தேர்வு வேண்டாம் என்று மாணவர்கள் போராடிய போது, வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்று போராடிய மாணவர்களை, சொந்த மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தை திசை திருப்ப வைத்தது இந்த கேடு கெட்ட எடப்பாடி அரசு.

அதே கேவலமான திட்டத்தை இப்போது 5,8ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கும் நடத்திப் பார்க்கிறது. போதாக்குறைக்கு மக்களின் கவனத்தை திசை திருப்ப ரஜினிகாந்தை வைத்து மோசமான அரசியலையும் நடத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories