தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி : தேர்தலில் போட்டிடும் வேட்பாளர் இறந்துவிட்டதாக பெயர் நீக்கம்!

திருவண்ணாமலை கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இறந்தது விட்டதாக வாக்காளர் துணைப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி : தேர்தலில் போட்டிடும் வேட்பாளர் இறந்துவிட்டதாக பெயர் நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கலசப்பாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மனைவி பாஞ்சாலை போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையம் இவருக்கு ‘பூட்டு’ சின்னம் ஒதுக்கப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை.

இறந்து விட்டதாக நீக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை அம்மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். மேலும், தற்போது வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவரால் வாக்குச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாஞ்சாலை
பாஞ்சாலை

இந்நிலையில் இதுகுறித்து பாஞ்சாலை கூறுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை வாக்காளர் பட்டியலில் வார்டு எண் 6 மற்றும் வரிசை எண் 25ல் பெயர் இடம் பெற்று வாக்களித்து வந்திருக்கிறேன். மேலும் என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நடைபெற்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல் கட்டத் தேர்தலே பல்வேறு குளறுபடி, குழப்பங்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பே ஒரு வேட்பாளர் இறந்துவிட்டதாக பெயரே வாக்காளர் பட்டியலில் இறந்ததாக நீக்கியிருப்பது அந்த ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories