தமிழ்நாடு

'வாக்கு எண்ணும் பணியின் CCTV நகலை வழங்குக' : தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு !

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் CCTV நகலை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

'வாக்கு எண்ணும் பணியின் CCTV நகலை வழங்குக' : தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்யக்கோரி சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேனி, கெளரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டனர்.

இது நீதிபதிகள் தாரணி, வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது.

அதோடு அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

'வாக்கு எண்ணும் பணியின் CCTV நகலை வழங்குக' : தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு !

அதற்கு இரண்டரை நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது? இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்கவும் என நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இரண்டு சிசிடிவிக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.

'வாக்கு எண்ணும் பணியின் CCTV நகலை வழங்குக' : தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு !

இதனையடுத்து பேசிய நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் எனவும், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி பதிவின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட நேரத்திற்குள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளரிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories