தமிழ்நாடு

2000 ஏழைகளின் குடிசைகளை அறிவிப்பின்றி இடித்த எடப்பாடி அரசு : நடுத்தெருவுக்கு வந்த சென்னை பூர்வக்குடிகள் !

சென்னையில் அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் எந்த வீத முன்னறிவிப்பும் இன்றி பொதுப்பணித்துறையினர் 2,000 வீடுகளை வீடுகளை இடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000 ஏழைகளின் குடிசைகளை அறிவிப்பின்றி இடித்த எடப்பாடி அரசு : நடுத்தெருவுக்கு வந்த சென்னை பூர்வக்குடிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா சாலை பகுதியில் அன்னை சத்தியவாணி முத்து நகர் உள்ளது. இந்த நகரில் தினக்கூலித் தொழிலாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியில் ஈடுபடுவர்கள் என 2000 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பொதுப்பணித்துறை, காவல்துறையும் நேற்றைய தினம் அப்பகுதிக்குச் சென்று திடீரென “நாளை உங்கள் வீட்டை இடிக்கப்போகிறோம். அதற்குள் வீட்டை காலி செய்யுங்கள்” என அவகாசம் எதுவும் கொடுக்காமல் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

போலிஸாரின் இந்த அறிவிப்பால் அப்பகுதி ஏழை மக்கள் என்ன செய்வது என்றே தெரியாது திகைத்துள்ளனர். முடிந்த அளவிற்கு தங்களால் பாதுகாக்க முடிந்த பொருள்களை மட்டும் பாதுகாப்பாக இடம் மாற்றியுள்ளனர்.

இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, பொக்லைன் இயந்திரத்திடன் 100-க்கும் மேற்பட்ட போலிஸார் மற்றும் பொதுப்பணித்துறையினர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வந்து வீடுகளை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.

2000 ஏழைகளின் குடிசைகளை அறிவிப்பின்றி இடித்த எடப்பாடி அரசு : நடுத்தெருவுக்கு வந்த சென்னை பூர்வக்குடிகள் !

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர் இசையரசு மற்றும் ஆசைத்தம்பி, ஆகியோரை போலிஸார் கடுமையாக தாக்கி கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் பொதுப்பணித்துறை, போலிஸாரின் உத்தரவின் படி, அப்பகுதி மக்களின் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ”இன்று திடீரென வந்து அதிரடியாக வீடுகளை இடித்து எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கியுள்ளார்கள். நேற்றைய தினம் அதிகாரிகள் எங்களிடம் வீடுகளை இடிக்கப் போவதாக சொன்னபோதே, எங்கள் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இன்னும் 5 மாதத்தில் முழு ஆண்டு தேர்வு இருக்கு. இந்த சமயத்தில் மாற்றினால், குழந்தைகளின் கல்வி பாதிக்கும். எனவே,அதுவரையும் இடிக்காதீர்கள் என கொஞ்சினோம்.

ஆனால் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. போராடிய எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களையும் கைது செய்துள்ளார்கள். ஊருக்குள் இருந்த எங்களை ஏற்கனவே ஒதுக்கி வைத்துள்ளார்கள். இப்போது இன்னும் தூக்கி வெளியே ஏறிய பார்க்கிறார்கள்.

ஏரிகளை வழிமறித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியவர்களையும், குளங்களை மூடி குடியிருப்பு கட்டியவர்களையும் விட்டுவிட்டு, ஒதுக்குப் புறமாக இன்னல்கள் மத்தியில் வாழும் எங்களைத் தான் குறிவைத்து அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். நகரிலேயே வீடுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை மற்றும் போலிஸாரின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காவல் நிலையத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் குவிந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அடிமை அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கு அதிகரித்து வருவது, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, சென்னையில் NRC, CAA சட்டங்களுக்கு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய கோலம் போட்டதற்காக கல்லூரி மாணவர்களை எடப்பாடியின் ஏவல்துறை கைது செய்தது.

அதேபோல், இப்போதும் அடிப்படை உரிமைக்காகப் போராடியவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories