தமிழ்நாடு

சீண்டிவிட்ட செந்தில்... சிக்கிக்கொண்டு கதறும் ஹெச்.ராஜா!

நியூஸ்18 செந்தில் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள ஹெச்.ராஜாவின் கடந்த காலப் பேச்சுகளை நெட்டிசன்கள் நினைவுபடுத்தி வருகின்றனர்.

சீண்டிவிட்ட செந்தில்... சிக்கிக்கொண்டு கதறும் ஹெச்.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நேற்றைய விவாதத்தில், ‘இந்தியா ஒரு இந்து நாடு.. இங்கு வசிக்கும் 130 கோடி மக்களும் இந்துக்கள்’ என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்தின் மீதான விவாவதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தை நெறியாளர் செந்தில் தொகுத்து வழங்கினார். இந்த விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சட்டப் பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மூத்த பத்திரிகையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் மணி, பா.ஜ.க சார்பில் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க ஆதரவு பேச்சாளர்கள் விவாதத்தில் கலந்துகொள்ளும் மற்ற விருந்தினர்கள் எதிர்க்கருத்துகள் சொல்லும்போது, அவர்களை பேசவிடாமல் இடைமறிப்பதும், கூச்சலிடுவதும் வழக்கம். இந்த முறை விவாதம் தொடங்கிய 15வது நிமிடத்தில், பா.ஜ.க.,வின் கே.டி.ராகவன், நெறியாளர் செந்திலைக் கூட பேசவிடாமல், தான் பேசுவதை மட்டுமே கேட்கவேண்டும். எதிர்கருத்துகள் சொல்லக்கூடாது என்கிற தொனியில் பேசினார்.

சீண்டிவிட்ட செந்தில்... சிக்கிக்கொண்டு கதறும் ஹெச்.ராஜா!

இதற்கு பதிலளித்த செந்தில், ‘நீங்களே கதாகாலட்சேபம் செய்யுங்கள்’ என்று சொன்னதால், அதிருப்தியடைந்த கே.டி.ராகவன், விவாதத்தில் பேசமாட்டேன் என்று எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், தனது பேச்சுக்கு திறந்த மனதோடு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார் செந்தில். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாமல் கே.டி.ராகவன் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தார். இந்நிலையில், அந்த காணொளி இன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், செந்தில் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அதைப் பலரும் பகிர்ந்து ஹெச்.ராஜாவின் கடந்த காலப் பேச்சுகளை நினைவுபடுத்தி வருகின்றனர்.

வாய்ப்பு கிடைக்கும் பொதுத் தளங்களில் எல்லாம், முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தினரையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் கொச்சையாகப் பேசி வரும் ஹெச்.ராஜா, உச்சபட்சமாக இந்திய இறையாண்மையின் உச்சமாக மதிக்கப்படும் நீதிமன்றங்கள் குறித்தும், காவல்துறை குறித்தும் கூட அவமரியாதையான வார்த்தைகளை உதிர்த்தார்.

சீண்டிவிட்ட செந்தில்... சிக்கிக்கொண்டு கதறும் ஹெச்.ராஜா!

அப்படிப்பட்ட ஹெச். ராஜா இந்த வார்த்தை பிரயோகத்திற்கு இப்படி குதிக்கவேண்டிய அவசியம் என்ன என்றும், கதாகாலட்சேபம் ஒன்றும் அத்தனை மோசமான வார்த்தை இல்லை, இந்து மதத்தில் புனிதமாக சொல்லப்படும் வார்த்தைதானே.. அதற்கு ஏன் இத்தனை வன்மமாகப் பதிவிட்டுள்ளார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories