தமிழ்நாடு

பேருந்தில் கைத்தறி துணிகள் விற்பனை : வித்தியாசமான முறையில் களத்தில் இறங்கிய சென்னிமலை கூட்டுறவு சங்கம்

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கைத்தறி கூட்டுறவுச் சங்கம் தனது விற்பனைப் பொருள்களை தனி பேருந்து மூலமாக விற்பனை செய்துவருகிறது.

பேருந்தில் கைத்தறி துணிகள் விற்பனை : வித்தியாசமான முறையில் களத்தில் இறங்கிய சென்னிமலை கூட்டுறவு சங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான பொருள்களை வீடு தேடி வர வைத்துவிட முடியும் என்பதனால் ஆன்லைன் ஷாப்பிங் களைகட்டுகிறது.

இதனால் பல பாரம்பரிய நிறுவனங்களும் தங்களின் விற்பனை பொருட்களை ஆன்லைனில் கொண்டு வரவும், மொபைல் கடைகளின் மூலம் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கைத்தறி கூட்டுறவுச் சங்கம் புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. தனி பேருந்து ஒன்றை இதற்காகத் தயார் செய்து, கைத்தறியிலான பொருள்களை ஏற்றிக்கொண்டு மக்களை நோக்கி விதிகளுக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செயல்பட்டு வரும் `சென்குமார் தொடக்கக் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம்' கைத்தறிப் போர்வைகள் மற்றும் துண்டுகளுக்குப் பெயர் பெற்ற சென்னிமலையில், கிட்டத்தட்ட 35 நெசவாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இந்த கைத்தறி நெசவுத் தொழிலை நம்பி சுமார் 20,000 பேர் இருக்கின்றனர்.

பேருந்தில் கைத்தறி துணிகள் விற்பனை : வித்தியாசமான முறையில் களத்தில் இறங்கிய சென்னிமலை கூட்டுறவு சங்கம்

அதில், சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் மூலமாகத் தயார் செய்யப்படும் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறை போன்றவை கோ-ஆப்டெக்ஸிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இச்சங்கமானது இதற்கு முன்பே வேனில், கைத்தறியினால் செய்யப்பட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து வந்திருக்கிறது. இச்சங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறையானது, சமீபத்தில் ரூ.32 லட்ச மதிப்பிலான பேருந்தினைக் கொடுத்திருக்கிறது.

இதை மக்கள் ஒரு கண்காட்சி போலப் பார்வையிட்டு, தேவைப்படும் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். மக்கள் ஆதரவு இருக்கும் நிலையில் கூடுதல் பேருந்து இயக்க கூட்டுறவு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories