தமிழ்நாடு

#CAAProtest : பா.ஜ.க-வின் கைக்கூலியான அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்- கனிமொழி எம்.பி பேச்சு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடந்த தி.மு.கவின் போராட்டத்தில் பங்கேற்றார் கனிமொழி எம்.பி

#CAAProtest : பா.ஜ.க-வின் கைக்கூலியான அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்- கனிமொழி எம்.பி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர் பாபு தலைமையில் பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசைத்திருப்பவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

#CAAProtest : பா.ஜ.க-வின் கைக்கூலியான அ.தி.மு.க-வை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்- கனிமொழி எம்.பி பேச்சு!

குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க செயல்பட்டதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற அவர், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்களை குடிமக்களாக ஏற்கும் மத்திய பா.ஜ.க அரசால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள தமிழர்களை ஏன் குடிமக்களாக அங்கீகரிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சட்டத்தை வாபஸ் பெரும்வரை தி.மு.கவின் போராட்டம் தொடரும் என்றார்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், தாயகம் கவி, தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories