தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் "தலை" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்!

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மீண்டும் "தலை" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னையில் சில நாட்களாக நடைபெறாமல் இருந்த பைக் ரேஸ், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே சாலை போன்ற இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெரினா சாலையில் காதைக் கிழிக்கும் சப்தங்களுடன் இன்று அதிகாலை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆர்.கே.சாலையை கடக்க முயன்ற இருவர் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பைக் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளது.

சென்னையில் மீண்டும் "தலை" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்!

இதனையடுத்து படுகாயமடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பைக் ரேஸ் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories