தமிழ்நாடு

‘காளை மாட்டின் மீது ஏறி டிக்-டாக்’ : கோவை இளைஞருக்கு நடந்த கதியைப் பாருங்க!

கோவையில் காளை மாட்டுடன் டிக்டாக் செய்த இளைஞர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘காளை மாட்டின் மீது ஏறி டிக்-டாக்’ : கோவை இளைஞருக்கு நடந்த கதியைப் பாருங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டம் ராயர் பாளையத்தைச் சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து ரேக்ளா ரேஸ்க்கு தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல தனது காளை மாட்டை குளிப்பாட்டுவதற்கு அருகில் உள்ள குளத்திற்குச் சென்றுள்ளார்.

அடிக்கடி காளை வைத்து ஏதாவது டிக்டாக் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி சம்பவம் நடைபெற்ற அன்று விக்னேஸ்வரன் காளை மாட்டை குளிக்கவைக்கும் போது டிக்டாக் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் டிக்டாக்கில் உற்சாகமான விக்னேஸ்வரன் மாட்டின் மீது ஏறி நீருக்குள் குதிக்க முன்றுள்ளார். நீரிக்குள் முழ்கிய மாடு மிரண்டு போய் விக்னேஸ்வரன் ஆழத்திற்கு கொண்டுச்சென்றது.

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

நீச்சல் தெரியாத விக்னேஸ்வரன் குளத்தில் சகதிக்குள் மாட்டிக்கொண்டுள்ளார். சக நண்பர்கள் மூன்றுபேர் காப்பாற்றுவதற்குள் விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் விக்னேஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அரைமணி நேரப்போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் விக்னேஸ்வரனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்றைக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் மோகத்தால் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செய்கைகளினால் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் நடைபெறுவது அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories