தமிழ்நாடு

மோடி ஆட்சியில் முடங்கிய சிறுதொழில்கள் - கடன், நஷ்டத்தால் வியாபாரி மகனுடன் தற்கொலை!

மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிறு தொழில் வியாபாரி ஒருவர் தனது மகனுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மோடி ஆட்சியில் முடங்கிய சிறுதொழில்கள் - கடன், நஷ்டத்தால் வியாபாரி மகனுடன் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசால் நாட்டில் சிறு-குறு தொழில் செய்பவர்களின் நிலைமை படுமோசமாக மறியுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தினாலும் லாபம் அடையமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் சிறுதொழில் செய்துவந்தவர்கள் தினசரி கூலி வேலைக்கும் சென்று வாழ்வாதரத்தை நகர்த்திவருகின்றனர். இதில் தொழில் நஷ்டத்தாலும் குடும்ப வருமானத்தை சமாளிக்க முடியாமலும் சிலர் உயிரிழந்துள்ளனர். அப்படி, தொழில் சரிவால் ஏற்பட்ட நெருக்கடியால் மகனுடன் சேர்ந்து சிறுதொழில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் இன்ப மூர்த்தி. 65 வயதான இன்ப மூர்த்தி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, பெரியவள்ளி பகுதியில் மல்லி மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இன்ப மூர்த்தியின் மில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் வாங்கி மில் நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் கடன் சுமார் 40 லட்சம் ஆன நிலையில் மன உலைச்சல் அடைந்த இன்ப மூர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வழக்கம் போல பணிக்கு வரும் ஊழியர்கள் மில் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது இன்ப மூர்த்தியும் அவரது மகன் கண்ணன் இருவரும் இறந்துக்கிடந்துள்ளனர். மேலும் மனைவி திலகவதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். திலகவதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மோடி ஆட்சியில் முடங்கிய சிறுதொழில்கள் - கடன், நஷ்டத்தால் வியாபாரி மகனுடன் தற்கொலை!

பின்னர், குடும்பத்தினருக்கும் போலிஸாருக்கும் ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடைய சம்பவ இடத்தை போலிஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடித்ததில், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுப்பதாக கடித்ததில் எழுதிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கடித்ததைக் கைப்பற்றிய சூலக்கரை போலிஸார் வெளியிடாமல் விசாரணைக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலகவதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories