தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை - அதிர வைக்கும் உண்மையை ஒப்புக் கொண்ட குற்றவாளி!

சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் மாணவர் முகேஷ் கொலை செய்யபட்ட வழக்கில் போலிஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை - அதிர வைக்கும் உண்மையை ஒப்புக் கொண்ட    குற்றவாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்களம் பகுதியை சேர்ந்த முகேஷ் குமார் தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று முகேஷ் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளான்.

முகேஷும், விஜய்யும் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்ததாகவும், விஜய்யின் சகோதரர் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அண்டை வீட்டினர் அங்கு சென்று பார்த்த போது, நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் முகேஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டார்.

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை - அதிர வைக்கும் உண்மையை ஒப்புக் கொண்ட    குற்றவாளி!

அக்கம்பக்கத்தினர் முகேஷை மீட்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தாழம்பூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.

பின்னர் விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்போது தானும் முகேஷும் பொம்மை துப்பாக்கி என்று நினைத்து விளையாடியதாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்துவிட்டதாகவும் தெரிவித்தார் விஜய்.

அச்சத்தின் காரணமாக விஜய் தப்பி ஓடி வழக்கறிஞர்கள் மூலம் சரண்டராகி உள்ளார் என விஜய்யின் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது.

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலை - அதிர வைக்கும் உண்மையை ஒப்புக் கொண்ட    குற்றவாளி!

ஆனால், விஜய் சொல்லும் காரணத்தில் போலிஸுக்கு சந்தேகம் இருந்தது. காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

விஜய்க்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலிஸார் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சித் தகவல் வெளியானது.

சென்னையின் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் ரவுடி கும்பல் ஒன்றில் விஜய்க்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தன்னுடைய ரவுடி கும்பலில் முகேஷையும் சேரும்படி விஜய் வலியுறுத்தி வந்தாராம். ஆனால், முகேஷ் இதற்கு மறுத்து உள்ளதாக தெரிகிறது.

வீட்டுக்கு வந்தபோதும், ரவுடி கும்பலில் சேரும்படி வற்புறுத்தியதாகவும், ஆனால் முகேஷ் பிடிவாதமாக இருந்ததால், துப்பாக்கியால் சுட்டு விட்டதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளான் விஜய். முகேஷை சுட்ட துப்பாக்கி நண்பன் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக விஜய் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று அந்த துப்பாக்கியை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் கையில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து சேர்ந்திருப்பது, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories