தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்தச் சிலையை நவம்பர் 4-ம் தேதியன்று சமூகவிரோதிகள், திருவள்ளுவர் திருவுருவச் சிலை மீது சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்த சமூக விரோதிகளின் இந்தச்செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் சிலையை சேதப்படுத்தி சமூகவிரோத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!

முன்னதாக, தமிழக பா.ஜ.க-வினர் அவர்கள் வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவித்துணி அணிவித்து, ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீறு, குங்குமம், சந்தனம் பொட்டு வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டார். அர்ஜூன் சம்பத்தின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

பா.ஜ.க.-வினர் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் திருவள்ளுவரை இந்துவாக அடையாளப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் திருவள்ளுவருக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மாலை, காவித் துண்டு அணிவித்து பூசை செய்ய அர்ஜுன் சம்பத்துக்கு போலிஸார் எப்படி அனுமதி கொடுத்தார்கள். அதிமுக அரசு இதற்கு துணை போகிறதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது!

இந்நிலையில், அனுமதியின்றி திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த குற்றசாட்டில் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத்தை தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் முன்னிலையில் வழிபட அனுமதித்து விட்டு பின்னர் கைது செய்து காவல்துறையினர் நாடகமாடுவதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories