தமிழ்நாடு

“மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், ஏன் நாய் கறி உண்ணக்கூடாது?” : மே.வங்க பா.ஜ.க தலைவர் திமிர் பேச்சு!

“மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், ஏன் நாய் கறியையும் உண்ணக்கூடாது” என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

“மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், ஏன் நாய் கறி உண்ணக்கூடாது?” : மே.வங்க பா.ஜ.க தலைவர் திமிர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விளம்பரத்திற்காகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை பேச்சுகள் பேசி வருகிறார்கள். மேலும் பல முறை அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரதமர் மோடி, தேவலோகத்தில் நம் முன்னோர்கள் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் விமான சேவையை பயன்படுத்தினார்கள். அதைக் கண்டுபிடித்ததே அவர்கள்தான் என்று பேசி இருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பா.ஜ.க மத்திய கல்வித் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்திய பசு மாட்டின் பாலில் தங்கம் கலந்துள்ளது என்று மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், இவர் நேற்றைய தினம் நடைபெற்ற பாஜகவினர் கட்சி நிகழ்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள பசுமாடுகள் தரும் பாலில் தங்கம் உள்ளது. அதனால், பாலில் மஞ்சள் நிறம் உள்ளது. ஆனால், இந்த சிறப்பு வெளிநாட்டு மாடுகள் இல்லை. வெளிநாட்டு மாடுகளுக்கு திமில்கள் கிடையாது. இந்திய பசு மாடுகளுக்கு திமில்கள் உள்ளன.

மேலும், அதில், உள்ள சுரப்பி சூரிய ஒளிபடும் போது தங்கத்தை உற்பத்தி செய்கிறது. அந்த பாலை குடித்தால் தான் மனிதர்கள் உயிர் வாழ முடியும். என பேசிய அவர், “மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், ஏன் நாய் கறியையும் உண்ணக்கூடாது” என கேள்வி எழுப்பினர்.

அதுமட்டுமின்றி, எந்த மிருகத்தை சாப்பிட்டாலும், உடல் நிலை நன்றாகதானே இருக்கிறது. நீங்கள் ஏன் மாட்டுகறியை சாலையோரங்களில் சாப்பிடுகிறீர்கள். உங்கள் வீட்டிற்குள் சாப்பிடுங்கள். பசுவைக் கொல்வதும் அவமதிப்பதும் இந்தியாவில் மிகப்பெரும் குற்றம். அவர்களை சமூக எதிரிகள் என்று அழைக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

திலீப் கோஷ் இதுபோல சர்ச்சை பேச்சு முதன்முறையாக பேசியதில்லை. அடிக்கடி இதுபோல் வினோதமான கருத்துக்களை பேசி விளம்பரம் தேடிக்கொள்வர் என்பதால், அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories