தமிழ்நாடு

விவசாயத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் புதிய திட்டம் : அழிவுக்கு வழிவகுக்கும் எடப்பாடி அரசு

ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தனி சட்டம் ஒன்றை அதிமுக அரசு கொண்டுவந்துள்ளது. அ.தி.மு.க அரசின் இந்த சட்டத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

விவசாயத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் புதிய திட்டம் : அழிவுக்கு வழிவகுக்கும் எடப்பாடி அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்த சாகுபடிக்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். இதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம், சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, கொள்முதலாளா் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும்போது, அன்றைய தினத்தின் விலையையே, பொருள்களைப் பரிமாற்றம் செய்யும்போதும் நிா்ணயிக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளா், அந்தப் பகுதியைச் சோ்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தை அலுவலா் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசு, மத்திய அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளைபொருள்களையும் புதிய சட்டத்தின் மூலமாக ஒப்பந்தங்களைச் செய்து விற்பனை செய்ய முடியாது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இந்நிலையில், இந்த சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “ தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும்.

அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம். இதற்கு தமிழக அரசு பலியாகிவிட்டது” என தெரிவித்தார். மேலும், “இந்த சட்டத்தால் பெரு நிறுவனங்களின் கைகளுக்கு விவசாய நிலங்கள் செல்லவே வழி வகுக்கும்.

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஓப்புதல் வழங்கியிருப்பது வேதனைக்கூறியது. அதுமட்டுமின்றி இதனால், விவசாயிகள் பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும். பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டதால் ஆபத்து நேரிடும்” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories