தமிழ்நாடு

சுஜித் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் கோபமுற்ற எடப்பாடி பழனிசாமி!

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி கோபப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுஜித் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் கோபமுற்ற எடப்பாடி பழனிசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் 80 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

ரிக் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழித் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சுஜித் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் கோபமுற்ற எடப்பாடி பழனிசாமி!

மீட்பு பணியில் அதிமுக அரசின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தாலேயெ சிறுவனை இழக்க நேரிட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தை சுஜித்தை மீட்பதற்காக தமிழக அரசு சார்பில் எல்லா தொழில்நுட்ப முறையையும் கையாண்டதாக முட்டுகொடுத்துள்ளார்.

சுஜித் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் கோபமுற்ற எடப்பாடி பழனிசாமி!

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கலாமே என தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அவர், எம்மாதிரியான தொழில்நுட்பத்தை கையாண்டிருக்க வேண்டும் என நீங்களே சொல்லுங்களேன் என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கோபப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் எதிர்கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories