தமிழ்நாடு

#exclusive சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு : மீட்கச் செல்லும் வீரர்கள் யார் ? அடுத்த திட்டம் என்ன?

#exclusive சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு : மீட்கச் செல்லும் வீரர்கள் யார் ? அடுத்த திட்டம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வரும் ஆரோக்கியராஜ் - மேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித். நேற்று மாலை 5.40 மணி அளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுர்ஜித், எதிர்பாராத விதமாக கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.

இந்தக் ஆழ்துளை கிணறு 7 வருடங்களுக்கு முன்பு ஆரோக்கியராஜ் தனது வீட்டு குடிநீர் பயன்பாட்டுக்காகத் தோண்டப்பட்டதாகவும், அதில் நீர் இல்லாததால் 5 வருடங்களுக்கு முன்பு அதில் மேல்பகுதியை மட்டும் மண்ணைப் போட்டு நிரப்பி இருக்கிறார்.

அந்தப்பகுதியில் சோளம் விதைத்து விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் மண் இறங்கி துளை மீண்டும் திறந்துள்ளது. அந்த துளையில் குழந்தை சுர்ஜித் விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்துள்ளான்.

குழந்தை சுஜித்
குழந்தை சுஜித்

குழந்தையை மீட்க நேற்று மாலையில் இருந்து 27 மணி நேரத்தைத் தாண்டி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தேசியப் பேரிடர் மீட்புக்குழு, மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, NLC, ONGC மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குழு உட்பட 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

முதலில் கயிறு, தானியங்கி கருவி, ரோபோ உள்ளிட்ட தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளதால், குழந்தை சுர்ஜித்தை மீட்பதில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மீட்புக்குழு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், NLC நிறுவனத்தில் இருந்து சிறப்பு சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் தொடர்ந்து அனுப்பட்டு வரும் நிலையில், அதிநவீன கேமரா, ரெக்கார்டர், மீட்புக்கருவி உள்ளிட்ட கருவிகள் கொண்ட சிறிய அளவிலான அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹைட்ராலிக் ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.

#exclusive சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு : மீட்கச் செல்லும் வீரர்கள் யார் ? அடுத்த திட்டம் என்ன?

அடுத்ததாக, சுர்ஜித் சிக்கி இருக்கும் 88 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 மீட்டர் தொலைவு தள்ளி, 1 மீட்டர் அகலத்தில் 90 அடிக்கு குழி தோண்டப்பட்டு, அதில் இருந்து சுரங்க அமைப்பு மூலம் பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி குழந்தையை மீட்க மீட்புக்குழு திட்டமிட்டுள்ளது.

சுரங்கம் தோண்டும் கருவி வந்ததும் குழி தோண்டத் தொடங்கினால், 5 மணி நேரத்துக்குள்ளாக குழந்தையை மீட்க முடியும் என்றும், அப்படி தோண்டப்படும் சுரங்கத்தில் ஒல்லியான உடல்வாகுடன் நல்ல மனநிலையும், திடமான உடல்நிலையும் கொண்ட கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தை சுர்ஜித்தை மீட்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணியின்போது, மண் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுக வாய்ப்பு இருந்ததால் இந்த திட்டத்தை இறுதியாக செயல்படுத்த நினைத்திருந்தனர். தற்போது வேறு வழி எதுவும் இல்லாததால், இந்த முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சுரங்க தோண்ட பயன்படும் ரிக் இயந்திரம்
சுரங்க தோண்ட பயன்படும் ரிக் இயந்திரம்

பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணியின்போது, மண் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுக வாய்ப்பு இருந்ததால் இந்த திட்டத்தை இறுதியாக செயல்படுத்த நினைத்திருந்தனர். தற்போது வேறு வழி எதுவும் இல்லாததால், இந்த முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories