தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல்!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு : தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல்!

அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என தி.மு.க-வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.

அதே போல், சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories