தமிழ்நாடு

5 மணி நேரம் ஆபரேஷன்...மாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்கள்!

பசு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வேப்பேரி தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

5 மணி நேரம் ஆபரேஷன்...மாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்கள்!
அறுவை சிகிச்சைக்கு பிறகு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்கள் பயன்படுத்தி வீசி ஏறியும் பிளாஸ்ட்க் பைகளினாலும் கழிவுகளினாலும் மனிதர்களைவிட பிற உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. நகரங்களில் மாடு வளர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. மாடு வளர்க்கும் ஒரு சிலரும் மேய்ச்சலுக்கு போதிய இடம் இல்லாமல் சாலைகளில் மாடுகளை மேய விட்டு விடுகின்றனர்.

அந்த மாடுகள் தெருவில் கிடப்பவற்றை என்ன என்று தெரியாமல் உட்கொள்கின்றன. இதில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும்.

அப்படி தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைத் திண்ற மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் அப்பகுதியில் மாடு வளர்த்து வருகிறார். அவருக்குச் சொந்தமான பசு ஒன்று, சமீபத்தில் கன்று ஈன்றது. அதன் பிறகு பசுவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வலியால் துடித்துள்ளது.

5 மணி நேரம் ஆபரேஷன்...மாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய மருத்துவர்கள்!

இதனால் பசு மாட்டை அருகில் இருந்த வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாட்டை பரிசோத்த மருத்தவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்கமுடிவு செய்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு குழுவினர் மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது மாட்டின் இரைப்பையில் சிக்கி இருந்த 52 கிலோ எடை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.

சுமார் 5 மணிநேரமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாட்டின் வயிற்றில் 2 ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மாடு தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories