Tamilnadu

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on
16 October 2019, 06:03 AM

டெங்கு மரணம் - 4 வயது சிறுமி பலி!

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நட்சத்திரா என்ற 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

தமிழகத்தில் டெங்குவால் 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பியூலா ராஜேஷ் ஒப்புதல்!

15 October 2019, 04:21 AM

தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணம் - மேலும் ஒரு சிறுமி பலி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்து மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற 5 வயது சிறுமி பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழப்பு

14 October 2019, 09:32 AM

டெங்கு தடுப்பு முறைகள்!

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!
14 October 2019, 09:32 AM

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்!

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!
14 October 2019, 09:20 AM

சென்னையில் டெங்கு காய்ச்சல்!

File image
File image

சென்னை அரசு மருத்துவமனைகளில் தினமும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 October 2019, 07:30 AM

கோவையில் டெங்கு பாதிப்பு!

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கு 128 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

14 October 2019, 07:29 AM

டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு!

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

14 October 2019, 07:28 AM

திருவள்ளூரில் டெங்கு பாதிப்பு!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 122 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

14 October 2019, 07:28 AM

அதிகரிக்கும் நோயாளிகள்!

டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பாதிப்புகளின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

#LIVE தொடரும் டெங்கு உயிரிழப்புகள் : 4 வயது சிறுமி பலி : தமிழகத்தில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு!
14 October 2019, 07:26 AM

தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories