தமிழ்நாடு

சீன அதிபர் வருகையால் தமிழக வியாபாரிகள் அச்சம் ஏன்? - காரணம் சொல்லும் விக்கிரமராஜா

சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் வருகையால் தமிழக வியாபாரிகள் அச்சம் ஏன்? - காரணம் சொல்லும் விக்கிரமராஜா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அப்பளம், வடகம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 7ம் ஆண்டு விழா அதன் தலைவர் திருமுருகன் தலைமையில் மதுரை வில்லாபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

சீன அதிபர் வருகையால் தமிழக வியாபாரிகள் அச்சம் ஏன்? - காரணம் சொல்லும் விக்கிரமராஜா

அப்போது பேசிய அவர், ''சாமனிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அப்பளம், வடகம் உள்ளிட்ட பொருட்கள் மீது கடுமையான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க வேண்டும், உணவு தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் வணிகர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் சீன பொருட்கள் ஆதிக்கம் அதிகரிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்திய பிரதமர் வியாபாரிகளிடத்தில் இது குறித்து விளக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

சீன அதிபர் வருகையால் தமிழக வியாபாரிகள் அச்சம் ஏன்? - காரணம் சொல்லும் விக்கிரமராஜா

முன்னதாக சிவகாசி பட்டாசுகளுக்கு சீன பட்டாசு போட்டியாக இருப்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என பட்டாசு வியாபாரிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இருப்பினும் சட்டவிரோதமாக சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் சீனப் பட்டாசுக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி கொடுத்துவிடுமோ என்ற பயம் வணிகர்களிடையே எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories