தமிழ்நாடு

பா.ஜ.க அரசின் துணையுடன் செயல்படும் அ.தி.மு.க நிச்சயம் தோற்கும் : தேர்தல் பிரச்சாரத்தில் நல்லகண்ணு உறுதி !

பா.ஜ.க அரசின் துணையுடன் செயல்படும் அ.தி.மு.க இடைதேர்தலில் தோல்வியை சந்திக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசின் துணையுடன் செயல்படும் அ.தி.மு.க நிச்சயம் தோற்கும் : தேர்தல் பிரச்சாரத்தில் நல்லகண்ணு உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.நல்லகண்ணு,“ கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சியில் அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்து வருகின்றனர். குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசின் துணையுடன் செயல்படும் அ.தி.மு.க நிச்சயம் தோற்கும் : தேர்தல் பிரச்சாரத்தில் நல்லகண்ணு உறுதி !

ஏரி - குளம், வரத்து வாய்க்கால் மராமத்து, தூர்வாரும் பணிகள் எனக் கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க-வினர் அதற்கான நிதியை கூட்டு கொள்ளையடிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும், கரும்பு நிலுவைத் தொகை பாக்கி வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மத்திய பா.ஜ.க அரசின் துணையுடன் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை, தமிழக அரசு தடுக்கவில்லை. விருப்பப் பாடமெனக் கூறி, இந்தி மொழியை திணிக்கின்றனா். மின்வாரியத்தை தனியாா்மயமாக்க முயற்சிக்கின்றனா்.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க மத்திய பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதிமுக அரசு நல்லது என்று குற்றம்சாட்டிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மக்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க ஆட்சி இடைத்தேர்தலில் தோல்வியை அடையும்” என நல்லக்கண்ணு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories