தமிழ்நாடு

ஆதிக்கத்தை எதிர்த்து பேசும் ‘அசுரன்’ மீது இந்து மகா சபா புகார்!

அசுரன் திரைப்படத்தில் வன்முறை இருப்பதாக அகில பாரத இந்து மகா சபா போலிஸில் புகார் அளித்துள்ளனர்.

ஆதிக்கத்தை எதிர்த்து பேசும் ‘அசுரன்’ மீது  இந்து மகா சபா புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அசுரன்'. இத்திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசுரன் படத்தை திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என பலரும் பாரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் வன்முறை இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து புகார் ஒன்றை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜனிடம் அகில பாரத இந்து மகா சபா அளித்துள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது, “கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்' திரைப்படத்தில், ஒரு பள்ளி மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசுவதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது.

ஆதிக்கத்தை எதிர்த்து பேசும் ‘அசுரன்’ மீது  இந்து மகா சபா புகார்!

இது அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும். தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, பழைய சாதிய நிகழ்வுகளை வன்முறை கலந்து படமாக்கி இருப்பதைக் கண்டிக்கிறோம்.

மேலும், நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். எனவே, அவரிடம் விசாரணை நடத்தி, அவரது பின்புலத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

அகில பாரத இந்து மகா சபா-வின் இத்தகைய புகாருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories