தமிழ்நாடு

4 நாட்கள் தொடர் விடுமுறை : சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

வார விடுமுறையுடன் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாக உள்ளதால் சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

4 நாட்கள் தொடர் விடுமுறை : சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வருகிற 7 மற்றும் 8ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் வார விடுமுறையும் வருவதால் சென்னையில் இருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதற்குக் கிளம்ப முற்படுவர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை : சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

அவர்களுக்காக நாளை (அக்.,4) முதல் 6ம் தேதி வரை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் உள்ளிட்ட முக்கிய பணிமனைகளில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், TNSTC இணையதளத்திலும், Red Bus போன்ற தனியார் சேவைகளிலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆன்லைன் மூலமே பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை : சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தங்களில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories