தமிழ்நாடு

ஹாலிவுட் பாணியில் முகமூடி அணிந்து கொள்ளை : லலிதா ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு!

திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்  பாணியில் முகமூடி  அணிந்து கொள்ளை : லலிதா ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம், சந்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல நகைகளைச் சரிபார்த்துவிட்டு கடையில் இருந்து பணியாளர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 6 காவலாளிகள் மட்டும் வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது கடையில் இருந்த நகைகள் காணாமல் கடையே அலங்கோலமாக இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளர் மற்றும் திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ஹாலிவுட்  பாணியில் முகமூடி  அணிந்து கொள்ளை : லலிதா ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு!

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், கடைகளை ஆய்வு செய்தனர். மேலும் கடையின் பின்புறத்தில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துளையிடப் பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். அதன் வழியாக கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என அறிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக கொள்ளையர்கள் கடை முழுவதும் மிளகாய்ப் பொடிகளை தூவி விட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, கொள்ளையர்கள் கடையில் இருந்த தங்கம் மற்றும் விலையுயர்ந்த வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு சுமார் ரூபாய் 50 கோடி வரை இருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட்  பாணியில் முகமூடி  அணிந்து கொள்ளை : லலிதா ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு!

மேலும், மூன்று அடிக்கு மாடி முழுவதும் நகைகள் இருக்கும்போது, கீழ் தளத்தில் இருக்கும் நகைகளை மட்டும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பதும், இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது அவர்கள் சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் கடைக்குள் இருந்துள்ளதும் பல சந்தேகங்களை ஏற்படுத்திவருவதாக போலிஸார் கூறுகின்றனர்.

மேலும், இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் ஊழியர்களை போலிஸார் விசாரத்து வருகின்றனர். நகைக் கடை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் மூகமுடி அணிந்தவாறே கொள்ளையடித்த நகைகளை ஒரு பையில் போடுவது பாதிவாகியுள்ளது. அந்த கொள்ளையர்களின் சிசிடிவி படங்களை போலிஸார் வெளியிட்டுள்ளனர்.

திருச்சியில் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூடும் நகைக் கடையில் இத்தகைய கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories