தமிழ்நாடு

மது அருந்த பணம் தராததால் கொலைவெறித் தாக்குதல் : ரத்த வெள்ளத்தில் ஒருவர் புகார்!

மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால் மூவர் சேர்ந்து, தன்னை சரமாரியாகத் தாக்கியதாக ரத்த வெள்ளத்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஒருவர்.

மது அருந்த பணம் தராததால் கொலைவெறித் தாக்குதல் : ரத்த வெள்ளத்தில் ஒருவர் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மது அருந்துவதற்கு பணம் கேட்டு தராததால் மூவர் சேர்ந்து, தன்னை சரமாரியாகத் தாக்கியதாக ரத்த வெள்ளத்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஒருவர்.

சென்னை மீனம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி தேவகோட்டையைச் சேர்ந்த ரவி (45) என்பவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். ரவி தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதி வழியாக வந்த மூவர் ரவியிடம் குடிப்பதற்காக ரவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ரவி, பணம் தர மறுத்ததால் அந்த மூன்று பேரும் ரவியை பயங்கர ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த ரவி ரத்த வெள்ளத்துடன் உடனடியாக மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று இதுபற்றி புகார் அளித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் ரவியைப் பார்த்த மீனம்பாக்கம் போலிஸார் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ரவியை அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவியை தாக்கிய அந்த மூவரையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories