தமிழ்நாடு

தனியார் பால் விலை உயர்வு; இன்று முதல் அமல்; பொதுமக்கள் அதிருப்தி!

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தனியார் பால் விலை உயர்வு; இன்று முதல் அமல்; பொதுமக்கள் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, அண்மையில் ஆவின் பால் விலையை அதிமுக அரசு உயர்த்தியது. லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியாவும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது. இந்நிலையில், இதர பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.

ஜெர்சி, ஹெரிடேட், திருமலா போன்ற பால்களின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பால் விலை உயர்வை எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், அதனை உடனே திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே, பொருளாதார சரிவால் பெரிய தொழில்கள் நஷ்டமடைந்துள்ள நிலையில், அன்றாடம் இல்லங்களில் உபயோகிக்கக்கூடிய பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாட்களை கடக்க சற்று சவால் நிறைந்ததாகவே இருக்கிறது என்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories