தமிழ்நாடு

“இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இன்றும் , நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவிவித்துள்ளது.

விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

“இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு, அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories