தமிழ்நாடு

“காந்தியை சுட்ட கோட்சே வெறும் துப்பாக்கி தான்” : பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யா!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான் என பெரியார் கூறியதை திரைப்பட நடிகர் சூர்யா சுட்டிக்காட்டிப் பேசினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னையில் ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். பின்னர் பேசிய சூர்யா, “மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது நாடுமுழுவதும் பெரும் வன்முறை வெடித்தது.

அப்போது அதன் எதிரொலி தமிழகத்தில் ஒலித்தபோது கோட்சேவின் துப்பாக்கியை உடைக்கும்படி பெரியார் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்பது பெரியாரின் கருத்து. ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்பும் ஒரு சித்தாந்தம் உள்ளது என்று பெரியார் பேசினார். தற்போதும் இந்த நிலையே நீடிக்கிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, “கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகும் காப்பான் படம் விவசாயம், அரசியல் போன்ற முக்கிய விஷயங்களின் பின்னணியில் தயாராகி உள்ளது. தமிழில் குழந்தைகள், பெண்களை மையமாக வைத்துத் தயாராகும் படங்கள் குறைவாக உள்ளன.

எனவேதான் குழந்தைகள் படங்களைத் தயாரிக்கிறேன். 14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். கல்வி பற்றிய தெளிவு இருப்பதால் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன்” என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories