தமிழ்நாடு

“இந்திக்கு இங்கே இடமில்லை”: ட்விட்டரில் களமிறங்கிய தமிழர்கள் - ட்ரெண்டாகும் #தமிழ்வாழ்க!

#StopHindiImposition #தமிழ்வாழ்க போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ‘ இந்தியை திணிக்காதே’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஆகிய ஹேஷ்டேக்குகளும் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

இந்தி ஆதிக்கத்தை நிறுத்து என்ற ஹேஷ்டேக் உலக அளவில் 4வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துகளை இணையவாசிகள் பலரும் இந்த ஹேஷ்டேக்குகளின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories