தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

சுபஸ்ரீ மரணம் : பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பேனர் விழுந்து விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் துறையும் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.

பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பேனர் வைத்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் ஜெயகோபால் மீது 189 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் ஜெயபாலைத் தேடி வந்தனர். இந்நிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories