தமிழ்நாடு

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

தி.மு.க. தொடங்கப்பட்டு ஓராண்டிற்குள்ளாக அண்ணா சிறைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் ‘ஆரிய மாயை’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம்.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு போன்ற உன்னத நோக்கங்களுக்காக அண்ணாவால் உருவானது ’திராவிட நாடு’ பத்திரிகை. 1942ம் ஆண்டு அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட நாடு தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அண்ணாவின் வீரியம் மிகுந்த வார்த்தைகளும், மொழிநடையும் வாசகரைக் கவர்ந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திராவிட நாடு இதழை வாசிக்கத் தொடங்கினார்கள்.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

தமிழ்நாட்டு இளைஞர்கள், திராவிட நாடு இதழின் மூலம் அரசியல் அறிவு பெற்றனர். உலக அரசியல் நிலவரங்களையும், ஆட்சி அமைப்பு முறைகளையும், ஜனநாயக, சமதர்மம் பற்றியும் அறிந்துகொள்ள திராவிட நாடு புதிய களமாக அமைந்தது.

திராவிட நாடு இதழில் அறிஞர் அண்ணா அவ்வப்போது எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே ‘ஆரிய மாயை’. பிரெஞ்சு பாதிரியார் அபே துபே என்பவர் இந்திய மக்களின் தன்மை மற்றும் பழக்கவழக்கங்கள் என்றொரு நூலை எழுதியிருந்தார்.

மைசூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு வந்து தங்கி இந்த மக்களின் குண நலன்களை நேரிலும், நூல் வழியாகவும் அறிந்து அவர் எழுதியது இந்த புத்தகம். இதை பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யூ.போப்.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆரிய மாயை எழுதினார் அண்ணா. இதுபின்னர் சிறிய நூலாக வெளிவந்து, பட்டிதொட்டி எங்கும் சென்றது. சனாதானத்துடன் போராட ஆரிய மாயை என்னும் கருத்தாயுதத்தை அண்ணா கையில் எடுத்ததை ஆதிக்கவாதிகள் ஏற்கவில்லை.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

விளைவு, ஆரிய மாயை தடை செய்யப்பட்டது. மட்டுமல்லாமல், இந்த நூலை எழுதியதற்காக அண்ணா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்மீதான தீர்ப்பு 1950 செப்டம்பர் 18ந் தேதி திருச்சி நீதிமன்றத்தில் தரப்பட்டது. நீதிமன்றம் அண்ணாவை குற்றவாளி என்றது. ரூ.700 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது ஆறுமாத சிறை தண்டனை என்று தீர்ப்பாகியது. அண்ணா அபராதம் கட்ட மறுத்து சிறை புகுந்தார்.

அன்று அண்ணா அறிவாயுதம் ஏந்தி சிறைபுகுந்தது ஆயிரக்கணக்கான தம்பிகளின் உள்ளத்தில் புதிய எழுச்சியை உருவாக்கியது. பகுத்தறிவுக் கொள்கையும், சனாதாரத்திற்கு எதிரான தீயும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது.திராவிட நாடு இதழ் 1963 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதற்குப் பின்னர் அண்ணாதுரை ‘காஞ்சி’ என்னும் பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். ‘காஞ்சி’ இதழில் வந்த கட்டுரைகள் புதிய எழுச்சியலையை உருவாக்கியது.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

இதில், இவர் பரதன், வீரன், சி.என்.ஏ என்ற பல பெயர்களில் கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவ்விதழ் அரியதொரு கருத்துப் பெட்டகமாக, அரசியல் விழிப்புணர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பகுத்தறிவு முதலிய செய்திகளைத் தாங்கி வெளிவந்தது. திராவிட நாடு இதழில் தலையங்கமாக ‘தம்பிக்கு’ எனும் பகுதி இடம்பெற்றது. தமிழகத்தில் கடித இலக்கியத்திற்கு வலுசேர்த்தன அண்ணாவின் கட்டுரைகள்.

முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளைப் பரப்ப அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்ட ‘மாலைமணி’ நாளிதழ் 1949இல் தொடங்கப்பட்டது. முன்னதாக ‘திராவிடன்’ (1946), ‘போர்வாள் (1947) போன்ற தி.மு.க. இதழ்களை வெளியிட்டு வந்துள்ளார்.

அண்ணா தன்னுடைய கடும் பணிச்சூழலிலும் சிறுகதை, கட்டுரை, உரையாடல் , நையாண்டிக் கட்டுரைகள் என முழுவீச்சில் திராவிடச்சிந்தனைகளை இளைஞர் மத்தியில் விதைத்தார்.

காஞ்சி என்ற பெயரில் பத்திரிகை தொடங்கியதற்கு விளக்கம் தந்தார் அறிஞர் அண்ணா. காஞ்சி(காஞ்சி - வார இதழ், மலர் 1, இதழ் 1, 26.7.1964) இதழில் அவர் தந்த விளக்கம் வருமாறு-

காஞ்சி என்பது ஒரு ஊரின் பெயர் மட்டுமல்ல, அதற்குள்ள பல பொருள்களிலே ஒன்று, பகைவரை எதிர்த்து நிற்பது என்பதாகும். நாடு வாழ்ந்திட எடுத்துக் கொள்ளப்படும் நன்முயற்சிகளுக்குக் கேடு விளைத்திடும் எதுவும், பகை எனும் நிலை பெறுகிறது. பகையை எதிர்த்து நிற்பது என்று கூறும்போது தாக்குதல், மோதுதல், வன்முறை என்று எண்ணிடத் தேவையில்லை.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

கரியுடன் கரியும், பரியுடன் பரியும் மோதிட, கையும் காலும் அறுபட, கழுகு வட்டமிட, ஓநாய் ஓடிவர, வெட்டியும் குத்தியும், வேல் வீசியும், வாள் சுழற்றியும், இடித்தும் பெயர்த்தும், கொளுத்தியும் கருக்கியும் நாசத்தை நடமிடவிடும் போர் அல்ல, நாம் மேற்கொள்வது - கருத்துடன் கருத்து உரசிட, வாதங்கள் ஒன்றினை மற்றொன்று வெட்டிட, தயங்காது தடுமாற்றம் கொள்ளாது அஞ்சாது ஆசைக்கு ஆட்படாது, வழிபலவற்றிலே எம் வழியே நல்வழி, பிறவழி சென்று நலனை இழந்திடாதீர். எம் வழி வருக என அன்புடன் அழைத்துச் செல்லும் முயற்சியே நாம் மேற்கொள்ளும் போர் முறை.

இருளழிக்க எவரே ஈட்டி எறிவர். காட்டுக் கூச்சலிடுவர்! இருட்பகை அழிந்துபட ஒளியைப் பயன்படுத்துவர். அஃதே போல, அறநெறி நடந்திடாததால், மூண்டிடும் இடர்மிகு இருள் நிலையை மாற்றிட ஒளிவளர் விதமான தூய தொண்டாற்றிக் காட்டுவதன் மூலம் இருட்பகை அழிப்போம்.

அருளாளர் கூறுகிறார். அர்த்த மற்றது போலத் தோன்றிடினும் அவர் உரையை நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இல்லையேல் பெரும்பாலும் இடர் வந்து சேரும் என்று மக்கள் நடுக்குங் குரலிற் பேசிக் கிடக்கும் காலமல்ல இது.

சொல்கிறேன், கேட்டு அதன்படி நட! இல்லையேல் வெட்டுப் பாறை என்று மிரட்டி மக்களைப் பணியவைக்கும் கொடுங்கோலரின் கொடி பறந்திடும் காலமுமல்ல.

புரியும்படி சொல்லு! பொருள் விளங்கும்படி பேசு! பொருத்தமானதாகக் கூறு! மறுத்திடுவோரின் வாதங்கள் பொய் என்பதை மெய்ப்பித்துக் காட்டு! - என்று மக்கள் கேட்டிடும் நாட்கள்.

இந்த நாட்களிலே, நாம் ஒருவழி என்று நம்பினாலும், நாம் அந்த நம்பிக்கை கொள்வதற்குத் தகுந்த பல காரணங்கள் நமக்குத் தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் அவ்வழியைத் தமக்கும் ஏற்ற வழி என்று கொட்டிடச் செய்ய வேண்டுமெனில் பொறுப்புடனும் பொறுமையுடனும் தனிப்பட்டோர் மீது காழ்ப்பு துளியும் கொள்ளாமலும், நமக்குச் சரி என்று பட்டதிலிருந்து வழுவாமலும் இருந்து இதமாகக் கருத்தினை விளக்கிட வேண்டும். மற்றவரின் இசைவு கிடைத்திடும் விதமாக, இஃதே நாம் மேற்கொள்ளும் போராகும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

இதிலே நாம் மகிழ்ச்சியும் பெருமையும் பெறத்தக்க விதமான வெற்றியைக் கண்டிட வேண்டுமெனில், முதலில் பிரச்சினைகளிலே நமக்குத் தெளிவும், வாதங்களிலே தரமும், அதனை எடுத்துக் கூறிடும் முறையினிலே திறமும் பெற வேண்டும். ‘காஞ்சி’ இதழ் இந்த வழி நின்றே, பிரச்சினைகளை அணுகிடும்” ஆய்வுரை கூறிடும்.

இது உரிமைக்குரல் எங்கும் எழுந்துள்ள காலம். உரிமைகளைப் பெற்று விட்ட காலம் என்று கூறுவதற்கில்லை; உரிமை பெற்றாக வேண்டும் என்ற துடிப்பு எழுந்துள்ள காலம்.

மக்களாட்சி முறை காரணமாக, சில அடிப்படை உரிமைகள் மனித குலத்துக்குக் கிடைத்துள்ளன; அந்த உரிமைகள் உருக்குலையாதிருக்கவும், அவைகளின் முழுப் பயனைத் துய்க்கவுமான முயற்சி, உலகில் பல்வேறு இடங்களிலே, நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம்.

ஒரு நாடு மற்றோர் நாட்டின் மீது பூட்டியுள்ள தளைகள், ஒரு இனம் மற்றோர் இனத்தின் மீது பூட்டியுள்ள தளைகள், பழமை புதுமையின் மீது வீசிடும் தளைகள் என்று இன்னோரன்ன பிற தளைகள், பொடி பட, மக்கள் விடுபட, நடத்தப்பட்டு வரும் எல்லா நன் முயற்சிகளையும் வாழ்த்தி வரவேற்று துணை நிற்க விழைகிறது ‘காஞ்சி’.

மொழி, கலை, பொருளாதாரப் பொறி, அரசியல் அமைப்பு எனும் எம் முறையிலே பூட்டப்படும் தளையெனினும், அவை அறுபட பெருமுயற்சி எடுத்துக் கொண்டாக வேண்டும். ‘காஞ்சி’ இந்தப் புனிதப்போரில் ஒரு படைக்கலனாக நல்வழி நாடுவோர் பக்கம் உரிமை பெற விழைவோர் சார்பில், இருந்திடும் பெரு விருப்பம் கொண்டுள்ளது.

மொழியைக் கொண்டு ஒரு பகுதி மக்கள், பிற பகுதியினரை, மட்டமாக்கிடும் முயற்சியாகவே, நாம் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்படுவதைக் கருதுகிறோம். எனவே எதிர்த்து நிற்கிறோம்.

இவைகளேயன்றி, பசியும் பிணியும், பேதமும், பிளவும், ஏழ்மையும் பிற்போக்குத் தன்மையும், மனிதகுல முன்னேற்றத்தைத் தடுத்திடும் ‘பகை’யாக நெளிகின்றன.

இந்தித் திணிப்பை எதிர்த்து ஆதிக்கவாதிகளுக்கு அன்றே பதிலடி கொடுத்த அண்ணா ! #HBDAnna  

அந்தப் பகையை அழித்திடும் பணியினிலே, ‘காஞ்சி’ தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விழைகிறது.

இந்தச் சீரிய பணியினைச் செம்மையாகச் செய்திடும் ஆற்றலும் வாய்ப்பும் ‘காஞ்சி’ பெற்றிட, உமது நல்லாதரவு மிகுதியும் தேவை. நல்கிடுவீர் என்ற நம்பிக்கையுடன் ‘காஞ்சி’ உரிமைக்குரல் எழுந்திடச் செய்ய வந்துளது. உமது வாழ்த்தும் வரவேற்பும் உண்டு என்ற எண்ணத்தின் துணை கொண்டு” இவ்விதழ் வெளிவரத் தொடங்குகிறது .

இவ்வாறு காஞ்சி இதழின் தேவையை சமூகத்திற்கு உணர்த்தினார். தன் வாழ்நாள் எல்லாம் மூடநம்பிக்கைகளை சாடிய அண்ணா, பத்திரிகை என்னும் அறிவாயுதம் தாங்கி தமிழர்களின் தன்மானத்தை காத்தார் என்பதே உண்மை.

Related Stories

Related Stories