தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம் : “அரசியல் தலைவர்களுக்கு வீட்டுகாவல் சரியானவை அல்ல” ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்!

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் : “அரசியல் தலைவர்களுக்கு வீட்டுகாவல் சரியானவை அல்ல”  ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.

முதலில் ஐ.நாவை பாகிஸ்தான் நாடியது. இது இரு நாடுகளுடனான பிரச்சனை இதில் ஐ.நா தலையிடாது. மேலும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சனையாக்க மாற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது.

அதாவது, காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்திற்கு, பாகிஸ்தான் எடுத்துச் செல்ல உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆனையத்தின் கூட்டத்தில் விவாதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் மிச்சேல் பேச்லெட்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் மிச்சேல் பேச்லெட்

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் ஜெனிவாவில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்திருந்தார்.

பின்னர் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் மிச்சேல் பேச்லெட், “காஷ்மீரில் இந்திய அரசு சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இணைய தள சேவை, உள்ளிட்ட தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளது, மேலும் அரசியல் தலைவர்கள் கைது செய்து நீண்ட நாள் வீட்டுகாவலில் வைத்திருக்கும் நடவடிக்கைகள் சரியானவை அல்ல.

அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும், அங்குள்ள மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும், காஷ்மீர் மக்களிடம் ஆலோசித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்” என்று மிச்சேல் பேச்லெட் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories