தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் இணைந்த அமெரிக்க இளைஞன் - கண்ணீரில் நனைந்த உணர்ச்சிகர நிகழ்வு

1999ம் ஆண்டில் சட்டவிரோதமாக தத்தெடுப்பதற்காக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட சிறுவன் 22 ஆண்டுகளுக்கு பின்பு பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் இணைந்த அமெரிக்க இளைஞன் - கண்ணீரில் நனைந்த உணர்ச்சிகர நிகழ்வு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நாகேஸ்வர ராவ் - சிவகாமி தம்பதியினர். இவர்களது மகன் சுபாஷ் இருபது வருடங்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் அந்த சிறுவனை, குழந்தைகளை சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கும் மலேசிய சமூக சேவை மையத்தில் விற்றுள்ளார். சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விற்பது தான் இந்நிறுவனத்தின் வேலை.

அவ்வாறு சுபாஷும் அமெரிக்காவில் உள்ள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தார். அதேநேரத்தில் சுபாஷை பிரிந்த பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடுத்தனர்.

அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட பின் வழக்கு விசாரணை சூடு பிடித்தது. விசாரணையில் அவினாஷ் என்ற பெயரில், அமெரிக்காவில் சுபாஷ் இருப்பது தெரியவந்தது. சுபாஷை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று மலேசிய நிறுவனத்தில் விற்றதும், சுபாஷை அமெரிக்காவுக்கு தத்துக் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் இணைந்த அமெரிக்க இளைஞன் - கண்ணீரில் நனைந்த உணர்ச்சிகர நிகழ்வு

சுபாஷை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பெற்றோரின் வழக்கறிஞர் சுந்தரவடிவேலன், அவரிடம் உண்மையை பேசி புரிய வைத்துள்ளார். உண்மைகளை புரிந்துகொண்ட சுபாஷ் தனது குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

முடிவு செய்தபடியே சென்னை வந்தார் சுபாஷ். தன் நிஜ பெற்றோர்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்தார். இவர்கள் தான் தன் நிஜ பெற்றோர் என்று அறிந்தது சுபாஷால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுபாஷ் வளர்ந்தது அமெரிக்கா என்பதால் தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே அவருக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் வழக்கறிஞர் உதவியோடு பெற்றோரிடம் அன்பு வார்த்தைகளைப் பொழிந்துள்ளார். காணாமல் போன மகனை 20 ஆண்டுகள் போராடி, மீட்டெடுத்த பெற்றோரின் செயல் நெகிழ்வை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories