தமிழ்நாடு

சாப்பாட்டில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததால் பிரபல முருகன் இட்லி கடையின் உற்பத்திக் கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் மிக முக்கிய உணவகங்களில் ஒன்றான முருகன் இட்லி கடையின் உற்பத்தி கூடத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை முழுக்க 23 கிளைகள் உள்ள முருகன் இட்லி கடை உணவகத்தின் பிராட்வே கிளையில், கடந்த 7ம் தேதி வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார்.

சாப்பாட்டில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!

இதனையடுத்து, பாரிமுனை முருகன் இட்லி கடைக்குச் சென்று உணவு மாதிரிகளை சோதனை செய்தபோது, புழு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து முருகன் இட்லி கடைக்கும் உணவு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் கூடம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ளது.

சாப்பாட்டில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!

அங்கு சென்று சோதனை நடத்திய பின்னர், உற்பத்திக் கூடத்திலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்பத்தூர் முருகன் இட்லி உணவகத்தின் உற்பத்திக் கூடத்துக்கு தற்காலிகமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது தொடர்பாக முருகன் இட்லி கடை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories