தமிழ்நாடு

மாற்றுக் கருத்து தெரிவித்தால் தேச துரோக சட்டம் பாய்கிறது - உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

மாற்றுக் கருத்து தெரிவிப்போரின் பேச்சுரிமையை பறிப்பதற்கு தேசத் துரோக தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கருத்து தெரிவித்தால் தேச துரோக சட்டம் பாய்கிறது - உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடியின் தலைமையிலான இரண்டாவது ஆட்சியில் மாற்றுக்கருத்துத் தெரிவிப்போரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்கும் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் மீது தேசத் துரோக தடுப்பு சட்டம் பாய்கிறது.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள வேளையில், உச்சநீதிமன்ற நீதிபதி இதுதொடர்பாக அதிருப்தி கருத்துத் தெரிவித்துருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசத் துரோக தடுப்பு சட்டம் மற்றும் பேச்சுரிமை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம், ஆட்சியாளர்கள் பெருபான்மையின் கருத்து மட்டுமே வைத்துக்கொண்டு சட்டம் கொண்டு வருகின்றனர். அதுபோன்று இயற்றக்கூடாது, சிறுபான்மைக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்பதனை எண்ணவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மாற்றுக் கருத்து தெரிவிப்போரை தேச விரோதிகள் என முத்திரைக் குத்தும் மோசமான போக்கும் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. ஏன் சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்போர் கூட பலவகையாக தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதனால் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அச்சப்படுகின்றனர். இந்த சூழல் ஆரோக்கியமானதல்ல.

மாற்றுக் கருத்து தெரிவித்தால் தேச துரோக சட்டம் பாய்கிறது - உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

மாற்றுக் கருத்து தெரிவிக்கும் உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் வகுத்து கொடுத்துள்ளது. அந்த உரிமை முக்கியமானது. அதாவது ஒருநபர் சட்டத்தை மீறாமல் எந்தவித வன்முறையும் தூண்டாமல் மற்றுக் கருத்தை கூற அவருக்கு உரிமையும் உண்டு” என்று நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ தேசவிரோத சட்டங்கள், வெளிநாட்டினர் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துவது அவர்களின் நலன்களுக்கு எதிரானது என கருதினார்கள்.

ஆனால் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் விமர்சிப்பது தேச துரோகம் ஆகாது. அது விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நீதித்துறையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்று கூறிய நீதிபதி, விமர்சனங்கள் நீதித்துறை சிறப்பாக செயல்பட உதவும் என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories