தமிழ்நாடு

ஃபேஸ்புக்கில் இருந்து 40 கோடி பேரின் தகவல் திருட்டு: அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஃபேஸ்புக் பயனாளர்களில் 40 கோடிப் பேரின் மொபைல் எண்ணை தனியார் நிறுவனம் அதன் இணையதளத்தில் பட்டியலிட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இருந்து 40 கோடி பேரின் தகவல் திருட்டு: அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சில ஆண்டுகளாகவே ஃபேஸ்புக் செயலி பயனாளர்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடியது அம்பலமானது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் தகவல்களை வழங்கியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிந்துதான் தகவல்களை திருடப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெக் க்ரஷ் (TechCrunch) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 41.9 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களான மொபைல் எண் மற்றும் இதர தகவல்களை ஒரு தனியார் நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, தகவல்கள் வெளியிடப்பட்டோரில் 13 கோடிப் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும், 5 கோடிப் பேர் வியட்நாமை சேர்ந்தவர்கள் என்றும், 1.8 கோடி பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சில பயனாளர்களின் ஐ.டி பெயர்கள், மொபைல் எண் மேலும் சில முக்கிய தகவல்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது.

ஃபேஸ்புக்கில் இருந்து 40 கோடி பேரின் தகவல் திருட்டு: அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இதனையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அந்த செய்தி நிறுவனம் கேள்வியெழுப்பியது. அதற்கு பதில் அளித்த ஃபேஸ்புக் அதிகாரி, “அந்தத் தகவல் உண்மைதான். தற்போது வரை பாதுகாப்பற்ற நிலையில் சில கட்டமைப்புகள் இருக்கின்றன. அதனால் ஹேக்கர்கள் ஹேக் செய்து தகவல்களை எடுத்திருப்பார்கள்.

ஆனால் 41 கோடி பேரின் தகவல்களை எடுக்கமுடியாது, அதற்கான வாய்ப்பு இல்லை. கட்டமைப்பு தகவல் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகிறோம்” என்று அவர் கூறியதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த விளக்கம் பயனாளர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சியின் ஐ.டி-யை ஹேக்கர்கள் ஹேக் செய்து ட்வீட் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories