தமிழ்நாடு

மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்

மெட்ரோ தூண்களில் சுவரொட்டி ஒட்டினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை பூமிக்கு அடியிலும், பாலங்கள் அமைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் அமைப்பதற்காக நிறைய பாலங்களும் கட்டடங்களும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது என ஏற்கெனவே மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.

மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்

இதனை மீறி பலர் மெட்ரோ ரயில் தூண்களில், கட்டடங்களில் விளம்பரங்களுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகையால் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, இனி மெட்ரோ ரயில் தூண்கள், பாலங்கள், கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories