தமிழ்நாடு

காதல் தோல்வி : சினிமா வசனம் பேசி மது போதையில் கையை பிளேடால் கிழித்த வாலிபர் பரிதாப பலி !

சென்னை பொழிச்சலூரில் காதலிக்கு காதல் பரிசு அளிக்கிறேன் எனக் கூறி தனது கையை கத்தியால் வெட்டி வழிந்த ரத்தத்தை மதுபாட்டிலில் பிடித்த இளைஞர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வி : சினிமா வசனம் பேசி மது போதையில் கையை பிளேடால் கிழித்த வாலிபர் பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்தவா் குமரேச பாண்டியன். இவா் பொழிச்சலூரில் தங்கியிருந்து தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவா் ஒரு பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தாா். ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த பெண் இவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாா். இதனால் மனம் உடைந்த குமரேச பாண்டியன்,நன்பா்களிடம் காதல் தோல்வி பற்றி கூறி,வேதனைப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பொழிச்சலூா் நேரு நகரில் உள்ள நண்பா் முத்து என்பவா் வீடு அருகே அமா்ந்து நண்பா்களோடு சோ்ந்து மது அருந்தினாா் குமரேச பாண்டியன். அப்போது திடிரென மதுபாட்டிலை உடைத்து தனது கை மணிக்கட்டில் வெட்டினாா்.

அதில் நரம்பு துண்டிக்கப்பட்டு,ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அந்த ரத்தத்தை மற்றொரு காலி மதுபாட்டிலில் பிடித்தாா் குமரேச பாண்டியன். உடனே அதிா்ச்சியடைந்த நண்பா்கள் ரத்தம் வெளியேறுவதை நிறுத்த முயன்றனா். ஆனால் அவா் அதற்கு மறுத்ததோடு,இந்த ரத்தம் என் காதலிக்கு நான் அளிக்கும் அன்பு காதல் பரிசு என்று சினிமா பாணியில் வசனம் பேசியுள்ளார்.

ஆனாலும் நண்பா்கள் வலுக்கட்டாயமாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அதற்குள் பெருமளவு ரத்தம் வெளியேறி விட்டது. அதோடு மருத்துவமனையிலும் குமரேச பாண்டியன் சிகிச்சைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெருமளவு ரத்தம் வெளியேறி, இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தாா். இது பற்றி சங்கா்நகா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

banner

Related Stories

Related Stories