தமிழ்நாடு

போலீஸ் தேர்வு எழுத வந்த நகை கொள்ளையன் : சிசிடிவி காட்சிகளை வைத்து சுற்றி வளைத்த காவல்துறை !

மதுரையில் போலீஸ் தேர்வு எழுதிய பிரபல நகை பறிப்புக் கொள்ளையனை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

போலீஸ் தேர்வு எழுத வந்த நகை கொள்ளையன் : சிசிடிவி காட்சிகளை வைத்து சுற்றி வளைத்த காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் மீது மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட புதூர் கூடல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.

தலைமறைவாக இருந்த விஜயகாந்தை காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் விஜயகாந்த் காவலர் தேர்வு எழுதிக் கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த விஜயகாந்தை சுற்றிவளைத்தனர்.அவரை கைது செய்த புதூர் காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories