தமிழ்நாடு

உப்பு விற்கும் முன்னாள் கஞ்சா வியாபாரி : குற்றவாளியைத் திருத்திய பெண் ஆய்வாளர் - நெகிழ்ச்சி சம்பவம் !

மதுரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நபருக்கு அறிவுரைகள் கூறி, அவரை உப்பு வியாபாரியாக மாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உப்பு விற்கும் முன்னாள் கஞ்சா வியாபாரி : குற்றவாளியைத் திருத்திய பெண் ஆய்வாளர் - நெகிழ்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரையை சேர்ந்த இப்ராஹிம்ஷா கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா விற்பனை செய்து வந்த இவர் மீது, பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இப்ராஹிம்ஷா திலகர் திடல் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலாவிடம் சிக்கியுள்ளார்.

காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா, இப்ராஹிம்ஷாவிடம் இன்றைய இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துவதால் என்னென்ன குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார். அவரிடம், திருந்தி வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா, தனது சொந்த செல்வதில் இப்ராஹிம் ஷாவிற்கு சைக்கிள் ஒன்றையும் உப்பு மூட்டையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட இப்ராகிம்ஷா தற்போது வெகு உற்சாகத்துடன் இப்பகுதியில் கூவிக் கூவி உப்பு விற்று வருகிறார்.

மதுரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நபருக்கு அறிவுரைகள் கூறி, அவரை உப்பு வியாபாரியாக மாற்றிய பெண் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories