தமிழ்நாடு

‘திருமணத்தை தடுக்கும் ரகசிய கும்பலுக்கு நன்றி’ - நாசூக்காக மிரட்டி பேனர் வைத்த குமரி கிராம 90’s கிட்ஸ் !

கன்னியாகுமரியில் திருமணங்களை தடுக்கும் கும்பலை எச்சரிக்கும் வகையில் கிராம இளைஞர்கள் விநோதமாக பேனர் வைத்துள்ளனர்.

‘திருமணத்தை தடுக்கும் ரகசிய கும்பலுக்கு நன்றி’ - நாசூக்காக மிரட்டி பேனர் வைத்த குமரி கிராம 90’s கிட்ஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுவிளை கிராமத்து இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்துவதாக குற்றஞ்சாட்டி கிராமத்தில் பல பகுதிகளை ப்ளக்ஸ் பேனர்களை வைத்து எச்சரித்துள்ளனர்.

திங்கள் சந்தையை அடுத்த புதுவிளை கிராமத்து இளைஞர் திருமணத்திற்காக வரன் கேட்டு வரும் பெண் வீட்டாரிடம் மணமகன்கள் குறித்து பொய்யான தகவலைச் சொல்லி ஒரு கும்பல் தடுக்கிறது என்பது அப்பகுதி இளைஞர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருமணம் கைகூடாமல் விரக்தியில் நொந்துபோன இளைஞர்கள், புரளி கிளப்பும் கும்பலை எச்சரிக்கும் வகையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேனர்களை வைத்துள்ளனர்.

‘திருமணத்தை தடுக்கும் ரகசிய கும்பலுக்கு நன்றி’ - நாசூக்காக மிரட்டி பேனர் வைத்த குமரி கிராம 90’s கிட்ஸ் !

அந்த பேனரில், “திருமண வரன்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இந்த நற்பணி தொடருமாயின் உரியவர்களின் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும்.

மேலும், வரன்களை தடுப்பதற்கு முன்பே எங்களிடம் தெரிவித்தார், பெண்வீட்டாரை சந்திப்பதற்காக வாகன வசதியும் செய்து தரப்படும். இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாத விரக்தியிலும், வரும் வரன்களை தடுக்கும் ஆத்திரத்தாலும் அப்பகுதி இளைஞர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இது போன்று ஊர் முழுவதும் ஆங்காங்கே பேனர்களை வைத்திருக்கிறார்கள். இந்த பேனர் வைத்த செய்தி சமூக வலைதளத்திலும் பரவியுள்ளது.

மேலும், டீக்கடையில் உட்கார்ந்து, இதுபோன்று வரும் திருமண வரன்களை தடுக்கும் கும்பல் மீது விசாரணை மேற்கொள்ளக் கோரி போலிஸிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories