தமிழ்நாடு

80 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற 20 வயது இளைஞனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை !

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

80 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற 20 வயது இளைஞனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சேர்ந்த 88 வயது மூதாட்டியை, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரான சரவணன், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தவறாக நடக்க சரவணன் முயன்றபோது, மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து சரவணனை கையும் களவுமாக பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வழக்கானது, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது குறித்து நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இனியும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories