தமிழ்நாடு

தம்பியை கழுத்தறுத்துக் கொன்றது ஏன்? : போலீசாரையே அதிரவைத்த அண்ணனின் வாக்குமூலம்!

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவனை இரு பெண்கள் உள்ளிட்ட குடும்பமே சேர்ந்து கழுத்தறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பியை கழுத்தறுத்துக் கொன்றது ஏன்? : போலீசாரையே அதிரவைத்த அண்ணனின் வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் - பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவகுமார். சிவகுமார் கடந்த 26ம் தேதி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் காப்புக் காட்டு பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேசவன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்துவரும் நிலையில், அயன்குஞ்சரத்தில் தாய் பராசக்தி மற்றும் உடன்பிறந்த அக்கா, அண்ணன் சரத்குமார் ஆகியோருடன் வசித்து வந்த 10ம் வகுப்பு மாணவனான சிவக்குமார் கொல்லப்பட்டது கிராம மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிவக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்தனர். சிறுவனின் சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ மீட்டர் ஓடிச்சென்ற நாய் சிறுவனின் வீட்டருகே படுத்துக்கொண்டது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் அந்த ஊரில் வசிப்பவர்களின் செல்போன் பயன்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஐந்து நாட்களில் கொலையாளிகளை கைது செய்துள்ளது போலீஸ். முறையற்ற உறவுகளால் இந்தக் கொலை நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தம்பியை கழுத்தறுத்துக் கொன்றது ஏன்? : போலீசாரையே அதிரவைத்த அண்ணனின் வாக்குமூலம்!

கைது செய்யப்பட்ட சிவகுமாரின் அண்ணன் சரத்குமாரின் வாக்குமூலம், போலீசாரையும், ஊர் மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சரத்குமார் கரும்பு வெட்டும் தொழில் செய்துவந்துள்ளான். அவனுடன், அவனுடைய சொந்த சித்தியும் கரும்பு வெட்டும் தொழிலுக்குச் சென்று வந்துள்ள நிலையில் இருவருக்குமிடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை சரத்குமாரின் தம்பி சிவக்குமார் தற்செயலாக பார்த்துள்ளான்.

இதையடுத்து, இதுகுறித்து வீட்டில் தெரிவித்துவிடுவேன் எனச் சொல்லிய சிவகுமாரை சமாளித்து வந்துள்ளான் சரத்குமார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும்போதெல்லாம் இதைச் சொல்லியே சரத்குமாரை மிரட்டி வந்துள்ளான் சிவகுமார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று காலையில் தனது உடன்பிறந்த சகோதரியுடன் சரத்குமார் முறையற்ற உறவில் ஈடுபட்டதை சிவகுமார் நேரில் பார்த்துவிட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டு எல்லோரிடமும் சொல்லப்போவதாகத் தெரிவித்துள்ளான்.

தனது தம்பியை சமாதானம் செய்ய முடியாமல் சரத்குமார், இதுபற்றி சித்தியிடமும், சகோதரியிடமும் விவாதித்துள்ளான். மூவரும் திட்டமிட்டு சிவக்குமாரிடம் உடும்பு பிடிக்கலாம் என்று ஏமாற்றி, கொலை செய்யும் நோக்கில் காப்புக்காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தம்பியை கழுத்தறுத்துக் கொன்றது ஏன்? : போலீசாரையே அதிரவைத்த அண்ணனின் வாக்குமூலம்!

அங்கு, உடும்பு ஓடுவதாகக் கூறி, அதனை பிடிப்பதற்காக பாறை இடுக்கில் உற்றுப்பார்க்க வைத்த சரத்குமார், கரும்பு வெட்டும் அரிவாளால் சிவகுமாரின் தலையை பிடித்து அறுத்துள்ளான். தப்பி ஓட முயன்ற சிவகுமாரை அவனது சித்தியும், சகோதரியும் சேர்ந்து கால்களை பிடித்துக்கொள்ள, தம்பியின் கழுத்தை அறுத்துள்ளான் சரத்குமார்.

கொலை செய்துவிட்டு ஊருக்குள் வந்து தம்பியை தேடுவது போல சரத்குமார் உள்ளிட்ட மூவரும் நாடகமாடியுள்ளனர். சரத்குமாரின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரு பெண்களை முறைதவறிய உறவுக்குப் பயன்படுத்தியதோடு, தம்பியையும் கொலை செய்த சரத்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த இரு பெண்கள் என மூவரையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்குப் பயன்படுத்திய கரும்பு வெட்டும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கொலை சம்பவமும், கொலைக்கான காரணமாக சரத்குமார் வாக்குமூலமும் போலீசாரையும் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories