தமிழ்நாடு

ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை: போலீஸ் விசாரணையால் மனமுடைந்த பெண் தற்கொலை!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற திருட்டு தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், காவல்துறையின் விசாரணைக்குப் பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் வீட்டிலிருந்து, சுமார் 1.5 லட்சம் ரூபாய் பணம் , ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பட்டுப் புடைவைகள் உள்ளிட்டவை காணாமல் போயின. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் வீட்டில் பணிபுரிந்த வனிதா மற்றும் விஜயா ஆகிய இரு பணிப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இருவரிடமும் நடைபெற்ற விசாரணையில், பார்வதி என்ற உறவுக்கார பெண்ணிடம், பாதுகாப்பிற்காக நகைகளைக் கொடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பார்வதியின் மகள் மற்றும் மகனை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர், நள்ளிரவு 1.30 மணிக்குத் தான் விடுவித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பார்வதி தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார். காவல்துறை விசாரணையால் ஏற்பட்ட, மிகுந்த மன உளைச்சலே பார்வதியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பார்வதியின் தற்கொலை குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories