தமிழ்நாடு

சூர்யாவின் கருத்து ஆதரவு தெரிவித்த ரஜினி : டென்ஷனாகி கொந்தளித்த தமிழிசை - கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா கருத்தை நான் அதரிக்கிறேன் என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் கருத்து ஆதரவு தெரிவித்த ரஜினி : டென்ஷனாகி கொந்தளித்த தமிழிசை - கடுப்பில் ரஜினி ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘புதிய கல்வி கொள்கை’ குறித்து நடிகர் சூர்யா இது ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருத்துத் தெரிவித்து இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க அமைச்சர்களும் சூர்யாவின் கருத்துக்கு எதிராக பேசினர். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பெரும் விவாதத்தை உருவாக்கி இருந்தது.

சூர்யாவின் நியாயமான கருத்துக்கு பல திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துப் பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று, சூர்யா நடித்துள்ள 'காப்பான்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “சமீபத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக் குறித்து சூர்யா பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அப்போது, சிலர் சூர்யாவின் இந்த கருத்தை ரஜினி பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என கூறுகிறார். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார்.

சூர்யாவின் கருத்து ஆதரவு தெரிவித்த ரஜினி : டென்ஷனாகி கொந்தளித்த தமிழிசை - கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

சூர்யாவின் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். சூர்யா அவரின் ‘அகரம் பவுண்டேஷன்’ மூலம் மாணவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். மாணவர்கள் படும் வேதனைகளை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு உண்டு. அதனால் அவர் கருத்துக்கள் நியாயமானவை. எதிர்காலத்திலும் அவரின் தொண்டுகள் மக்களுக்கு தேவைப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம், “ ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் ” என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories