தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அரியலூரில் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு வகையில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்காமல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் வெகுஜன மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது அ.தி.மு.க அரசு.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - முடக்க நினைக்கும் அ.தி.மு.க பா.ஜ.க 

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாயிலில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், காவிரி பாசனப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இன்று மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கிராமப்புற வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

banner

Related Stories

Related Stories