தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 2,045 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெண்கள் மட்டும் குழந்தைகள் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக 2018ம் ஆண்டில் மட்டும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 2,045 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அந்த தகவல்படி, 2017ம் ஆண்டில் பாலியல் வல்லுறவு 1,154 வழக்குகளும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 433 என மொத்தமாக 1,587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே 2018ம் ஆண்டு பாலியல் வல்லுறவு வழக்கு 1,464 வழக்குகளும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 581 என மொத்தமாக 2,045 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!

அதனையடுத்து, தமிழகத்தில் கடத்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றம் சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2016ம் ஆண்டு பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக 336 வழக்குகளும், 2017ம் ஆண்டு 292 வழக்குகளும், 2018ம் ஆண்டு 338 வழக்குள் என மொத்தமாக 2,504 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த குற்றத்திற்காக 2016ம் ஆண்டு 58 வழக்குகளும், 2017ம் ஆண்டு 48 வழக்குகளும், 2018ம் ஆண்டு 55 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பெண்கள் மீது கணவர் மற்றும் உறவினர்கள் ஈடுபடும் வன்முறை குறித்த வழக்குகள், 2016ம் ஆண்டு 1256 வழக்குகளும், 2017ம் ஆண்டு 984 வழக்குகளும், 2018ம் ஆண்டு 789 வழக்குகளும் பதிவு செய்யட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு ஏற்பட்ட மானபங்கம் குறித்து, 2016ம் ஆண்டு 854 வழக்குகளும், 2017ம் ஆண்டு 774 வழக்குகளும், 2018ம் ஆண்டு 814 வழக்குகளும் பதிவு செய்யட்டுள்ளது.

மொத்தமாக 2016ம் ஆண்டு 2504 வழக்குகளும், 2017ம் ஆண்டு 2064 வழக்குகளும், 2019ம் ஆண்டு 1996 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை மற்றும் குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகச் செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories