தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை : குவியும் பாராட்டுகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை சி.சி.டி.வி காட்சியை கொண்டு 48 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை : குவியும் பாராட்டுகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தப்பட்ட 48 மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கடந்த 14ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராம்சிங், நீலாவதி தம்பதியின் சோம்நாத் என்ற 3 வயது ஆண் குழந்தை நள்ளிரவு 3 மணியளவில் மர்ம நபரால் கடத்தப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை : குவியும் பாராட்டுகள்

சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, சிவப்பு நிற பையுடன் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் எடுத்துச் செல்லும் காட்சி ரயில் நிலையத்தின் சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது. அதேபோல், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அதே நபர் குழந்தையுடன் சென்றது சி.சி.டி.வி காட்சி மூலம் தெரியவந்தது.

இந்த நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே குழந்தை ஒன்று தனியாக சாலையில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு குழந்தை நல வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

கைதான கோபி ரெட்டி
கைதான கோபி ரெட்டி

சென்ட்ரலில் காணாமல் போன குழந்தை குறித்து செய்தி பரவியதையொட்டி, கடத்தப்பட்ட குழந்தைதான் காப்பகத்தில் உள்ளது என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனே விரைந்த போலீசார் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை மீட்டெடுத்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கோபி ரெட்டி என்கிற நபரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரித்து வருகின்றனர். பரபரப்பான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலிஸாருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories